நாங்கள் இங்கே பாடும் எங்கள் இயேசு நல்லவர்
உண்மை தெய்வம் இவர் உலகை இரட்சிப்பவர்
நன்மை செய்தே இவர் நாடெங்கும் சுற்றியவர்
நானிலத்தோர்க்கு நன்மைகள் செய்த நல்லவர் - இயேசு
இயேசு நல்லவர் இயேசு நல்லவர்
இயேசு நல்லவர் இயேசு நல்லவர்
ஆதரவில்லா அனாதைகட்கு இயேசு நல்லவர்
தீய வழிகளிலே மனந்திரும்பிடுவோர்க்கு இயேசு நல்லவர்
குஷ்டரோகிகளையும் சொஸ்தமாக்கிடும் இயேசு நல்லவர்
முட்களின் நடுவே லீலியின் ரோஜா இயேசு நல்லவர்
ஈன லோகத்திற்காக சிலுவை சுமந்த இயேசு நல்லவர்
மூன்றாம் நாளில் மரித்துயிர்த்தெழுந்த இயேசு நல்லவர்