பரிசுத்த மெய் தீபமே
உயிராய் வந்தீரைய்யா
உணர்வே நீர்தானைய்யா – என்
நல் ஆவியாய் வந்தீரே
இறுதிவரை என்றென்றைக்கும்
எனக்குள்ளே வாழ்பவரே
இன்பமாய் பாடுகிறேன்
இறைவாக்கு என் நாவிலே
என் வழியாய் பேசுகிறீர்
மகிமையின் சிகரம் நீரே
உருமாற்றம் அடைகின்றேன்
உம் மேக நிழல்தனில்
மண்ணகம் வந்தீரே
புதிதாக்கும் பரிசுத்தரே
உருவாக்கும் உன்னதரே
வெளிப்பாடு தருகிறார்
அவர் விருப்பம் நிறைவேற்ற
ஞானம் தந்து நடத்துகிறீர்
மேக நிழலாக
தவறாமல் நடத்துகிறீர்
விலகாமல் முன் செல்கிறார்
கூப்பிட செய்தீரே
பிள்ளையானேன் உம் பிரசன்னத்தால்
பெலனடைந்தேன் உன் வரவால்