என்று நான் கண்டு களிப்பேனோ
என்று நான் கண்டானந்திப் பேனோ - பரலோக
சேவிப்பேன் நித்தியம் நேசரை
ஆ! என் இன்பமே ! ஆனந்த பாக்கியமே
நாவினால் இயம்பவும் ஏலாதே - பரலோக
சொர்ண மயமான வேலைகள்
சோபனக் கீதமே சுந்தர நாடதே
சுத்தர் ஒருமித்து வாழ்வாரே - பரலோக
மாதா பிதா மற்றும் சோதராய்
உத்தம ஜீவிகள்! சொர்க்கத்தின் வாசிகள்
கஷ்டம் சகித்திட்ட சுத்தர்கள் - பரலோக
என்று மழியா சுதந்திரம்
ஈலோக இன்பத்தைக் குப்பையென் றெண்ணினேன்
ஏசுவே எந்தனின் இன்பமே - பரலோக
செல்லுவேன் கஷ்டத்தின் பாதையில்
வாடா முடி சூட ஏகுவேன் - பரலோக