புகழ் பாடிடப் பிறந்தார்
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா ஜோதியாய் வளர்ந்தார் - பிறந்தார்
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மா ஜோதியாய்த் திகழ்ந்தார் - பிறந்தார்
மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினதால்
மேலான நாமம் பெற்றார் - பிறந்தார்
அவர் நாமந்தரித்தவர் யாவருமே
அவர் பாதையில் நடப்போம் - பிறந்தார்
புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
பரன் ஆவியில் மகிழ்வோம் - பிறந்தார்