இஸ்ராயேலே ஆரவாரம் செய்திடு
கெம்பீரித்துப் பாடிப் பாடி மகிழ்ந்திடு
ஆரவாரம் செய்திடு (2)
அகற்றிவிட்டார் உன் பகைவர்களை
வந்துவிட்டார் அவர் உன் நடுவில்
இனி நீ தீங்கைக் காணமாட்டாய்
உன்னைக் குறித்து அவர் பாடுகின்றார்
அனுதினமும் அவர் அன்பினாலே
புது உயிர் உனக்குத் தருகின்றார்
பயப்படாதே நீ அஞ்சாதே
இனி நீ இழிவு அடையமாட்டாய்
உனது துன்பம் நீக்கிவிட்டார்
அவமானம் நீக்கி ஆசீர்வதிப்பேன்
ஊனமுற்ற உன்னைக் காப்பாற்றுவேன்