மறுரூபம் ஆவேன் மனமதிலே
மகிழ்ந்திடவே தரிசிக்கவே பரன் முகமே
உண்மை மனதுடன் ஒப்படைத்தேன்;
ஏற்றுக் கொண்டருளும், தேவபெலன் விளங்கும்
தேற்றி உயிர்ப்பித்திடும் - உம் ஆவியினால் - மகிமை
தேவப்பிள்ளைகள் அடையும் பாக்கியம்;
எந்தன் வாஞ்சை இதே, என்று சேர்ந்திடுவேன்?
என்னை நிரப்பிடுமே - தம் ஆவியினால் - மகிமை
ஜீவ ஊற்றுகள் திறந்தனவே
தம் கரம் பிடித்தேன், அங்கு வழி நடத்தும்
தாகம் தீர்த்திடுமே - தம் ஆவியினால் - மகிமை
பேசும் ஆண்டவர் தொனியும் கேட்டேன்
இன்ப வாக்குகளே, எந்தன் போஜனமே
என்னை பலப்படுத்தும் தம் ஆவியினால் - மகிமை
தூய வாழ்க்கையின் தேவை அதுவே,
தேவ சேவையிலே பாடு சகித்திடவே
தாரும் பொறுமை பெலன் - தம் ஆவியினால் - மகிமை
அன்பர் இயேசுவின் சொந்தமாமே
பூரணம் அருளும்! ஆயத்தப்படுத்தும்
பாடிப் பறந்திடுவேன் - தம் ஆவியினால் - மகிமை