வாழ்வினில் வாழ்வு மணவாழ்வு - புவி வாழ்வினில் வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு
சுப மண மகளிவர் இதுபோது
மண முறை யோது வசனம் விடாது
வந்தன ருமதருள் பெறவேது - நல்ல - மண
தெய்வீக மாமண அலங்காரா
தேவ குமாரா திரு வெல்லையுரா
சேர்ந்தவர்க்கருள் தராதிருப்பீரா? - நல்ல - மண
கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்
அடக்க மாசாரம் அன்பு உதாரம்
அம்புவி தனில் மனைக் கலங்காரம் - நல்ல - மண
மந்திரம் அவர்க்குரை மேதாவி
அன்றியிப்பூ விலமிர்த சஞ்சீவி
அவளை யில்லாதவ னொரு பாவி - நல்ல - மண