மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை
அவை காலைதோறும் புதிதாயிருக்கும்
பாடுகளை ஏற்றுக் கொண்டு
துக்கங்களை சுமந்து கொண்டீர் - ஐயா
உண்டுபண்ணும் தண்டனையோ
உம்மேலே விழுந்ததையா - ஐயா
தலைமேலே சுமந்து கொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தீர் - ஐயா
காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
தழும்புகளால் சுகமானோம் - உந்தன்
தேவைகளை அறிந்தவராய்
தினம் தினம் அற்புதம் செய்தீர் - ஐயா