இம்மாயலோகம் தாண்டியே எம்வீடு தோன்றுதே
காத்திருந்து ராஜ்யம் கண்டடைவோம்
ஆண்டவருடன் நாம் என்றும் ஆளுவோம்
ஆதிமுற் பிதாக்களோடு தூதருமாய்
ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம்
நித்ய ராஜ்ய மக்களை ஆயத்தமாக்கவே
நேசர் இயேசு வாக்குரைகள் நம்பியே - ஆனந்தமே
நம் அண்ணல் இயேசுவின் சமூகம் முன்னே செல்லுதே
கர்த்தரே துடைத்து எம்மைத் தேற்றுவார் - ஆனந்தமே
நல் ஏகமாய் வனாந்திர வழிநடத்துவார்
இப்புவி கடந்து அக்கரை சேர்வோம் - ஆனந்தமே
இக்கட்டுத்துன்ப நேரமோ கலக்கமில்லையே
கைவிடாமல் நித்தமும் நடத்துவார் - ஆனந்தமே
தம் ஆவலோடு வானிலே தூதர்கள் சூழ்ந்திட
காகளத் தொனியுடன் வருகிறார் - ஆனந்தமே