வல்ல ஆண்டவர் இயேசுவண்டை
வருத்தத்தோடே கழிப்பது ஏன்
வந்தவர் பாதம் சரணடைந்தால்
வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார் - வரு
கண்டிடும் உற்றார் உறவினரும்
கூடுவிட்டு உன் ஆவி போனால்
கூட உன்னோடு வருவதில்லை - வரு
அதை நம்பாதே மயக்கிடுமே
மரணம் ஓர் நாள் சந்திக்குமே
மறவாதே உன் ஆண்டவரை - வரு
வானவர் இயேசு நாமம் அல்லால்
இரட்சிப்படைய வழி இல்லையே
இரட்சகர் இயேசு வழி அவரே - வரு
மாறாத உந்தன் பலவீனமும்
கோரக் குருசில் சுமந்து தீர்த்தார்
காயங்களால் நீ குணமடைய - வரு
நித்திய ஜீவன் உனக்களிப்பார்
உன்பேரை ஜீவப்புஸ்தகத்தில்
உண்மையாய் இன்று எழுதிடுவார் - வரு