வழிமேல் விழிவைத்து
காத்திருக்கின்றேன் இறைவா
பெருமூச்சைப் பார்த்து மனம் இரங்கும்
பயபக்தியோடு பணிந்து கொண்டேன்
குறையில்லாத பேரின்பம் உம் பாதத்தில்
உம்மையன்றி வேறு ஒரு செல்வம் இல்லையே
நீர்தானே எனது உரிமைச் சொத்து
எனக்குரிய பங்கும் நீர்தானய்யா
அழிந்துபோக அனுமதியும் தரமாட்டீர்
என் உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது
நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்
ஒருபோதும் அசைவுற விடமாட்டீர்