அன்போடே என்னை அழைத்தீரே
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
ஆயத்தமானேன் தேவே
என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே
என் துயர தொனியோ இதை யார் இன்று கேட்பாரோ
என்றீரே வந்தேனிதோ - அழைத்தீரே
என்னை விட்டோடும் என் ஜனமே
எத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோ
எப்படி நான் மறப்பேன்? - அழைத்தீரே
ஆண்டவர் அன்பு பொங்கிடவே
ஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரே
நன்றியுடன் உழைப்பேன் - அழைத்தீரே
ஏழை ஜனத்தை மீட்டிடுமே
எந்தன் பிதா சித்தமே என போஜனமும் அதுவே
என்னையும் ஒப்படைத்தேன் - அழைத்தீரே
ஆசாபாசங்கள் பெருகிடுதே
ஆயிரம் ஆயிரமே நரக வழி போகின்றாரே
ஆண்டவரே இரங்கும் - அழைத்தீரே
பாதம் பணிந்தே செய்திடுவேன்
ஆயுள் முடியும்வரை கிறிஸ்தேசு வருகை வரை
ஆண்டவரை அடைவேன் - அழைத்தீரே