ஓசன்னா கீதம் பாடுவோம்
வேகம் சென்றிடுவோம்
ஓசன்னா ஜெயம் நமக்கே -2
அல்லேலூயா துதி மகிமை
இயேசு ராஜா எங்கள் ராஜா
என்றென்றும் போற்றிடுவோம்
தொல்லை கஷ்டங்கள் தேடிவந்தாலும்
பயமுமில்லை கலக்கமில்லை
கர்த்தர் நம்முடனே
எரிகோ கோட்டை எதிர் நின்றாலும்
பயமுமில்லை கலக்கமில்லை
மீட்பர் நம்முடனே