எந்தனுக்காக சிந்தினீரே
கோரப்பாடுகள் யாவும் சகித்தீர்
அத்தனையும் எனக்காகவோ
மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா (2)
தேவ தூதரிலும் மகிபனாய்
என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன் (2)
கீடாய் என்ன நான் செய்திடுவேன்
நரகாக்கினையில் நின்று மீட்ட
சுத்தக் கிருபையை நித்தம் பாடுவேன் (2) - மாபாவி
தாங்கக் கூடாத மா பாரமே
மன்னிக்கும் தயை பெருத்த என் தேவா
மன்னித்து மறந்தும் தள்ளினீர் - மாபாவி
உமது சமூகம் இன்பமே
அழுகை நிறைந்த பள்ளத்தாக்கை
நீருற்றாகவே மாற்றுகின்றீர் - மாபாவி
வலக்கரத்தாலே தாங்குகின்றீர்
மனப் பாரத்தால் சோர்ந்திடும் போது
ஜீவ வார்த்தையால் தேற்றுகின்றீர் - மாபாவி
உதவிகட்காய் என்ன செய்வேன்
இரட்சிப்பின் பாத்திரம் சுமந்தே நான்
பொன்னு நாமத்தைப் புகழ்ந்திடுவேன் - மாபாவி
உமக்காக நான் என்ன செய்வேன்
எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம் உம்
சிலுவை சுமந்தே வருவேன் - மாபாவி