எதற்கும் பயப்படேன்
இவ்வுலகம் எனக்கெதிராய்
என்ன செய்ய முடியும்
பாடுவேன் அதிகமாய்
திருவசனம் தியானம் செய்து
ஜெயமெடுப்பேன் நிச்சயமாய்
இறை அமைதி என்னை காக்கும்
இவ்வுலகம் எனக்கெதிராய்
என்ன செய்ய முடியும்
என்பதை நான் அறிந்து கொண்டேன்
எதிராக செயல்படுவோர்
திரும்புவார்கள் பின்னிட்டு – அச்சம்
மீட்டீரே கிருபையினால்
உம்மோடு நடந்திடுவேன்
உயிர்வாழும் நாட்களெல்லாம்
கணக்கெடுக்கும் தகப்பன் நீர்-என்
கண்ணீரைத் தோற்பையில்
சேர்த்து வைத்துப் பதில் தருவீர்
செலுத்துகிறேன் நன்றி பலி
காலடிகள் இடறாமல்
காத்தீரே நன்றி ஐயா