Song Book:
Spiritual Songs of Joy
ஆவிக்குரிய சந்தோஷக் கீதங்கள்
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக் கென்ன குறைவுண்டு நீ சொல் மனமே
பொன்னோ தொலைந்திடும், மண்ணோ அழிந்திடும் பூவோ ரொழிந்திடுவார் கணமே
என்னாசைமிகும் இயேசுவோ நித்தியர் எல்லா பொருள்விலை கொள்ளாப் பொருளெனும் - என்
என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தே என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்
விண்ணுலகுயர்ந்தோர் உன்னதஞ் சிறந்தோர் மித்திரனே, சுகபத்திரமருளும் - என்
பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோ பயந்து நடுங்கிட ஜெயஞ் சிறந்தோர் சாபமே தீர்த்தார் சற்குரு நாதன் சஞ்சல மினியேன்? நெஞ்சமே மகிழ்வாய் - என்
கவலைகள் தீர்ப்பார், கண்ணீர் துடைப்பார் கடைசி மட்டும் கைவிடாதிருப்பார்
பாவ மன்னிப்பளிப்பார் பாக்கியம் கொடுப்பார் பரம பதவியினுள் எந்தனை எடுப்பார் - என்
ஆசி செய்திடுவார், அருள் மிகவளிப்பார் அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்
மோசமே மறைப்பார், முன்னமே நடப்பார் நித்ய வழி சத்யம் வாசல் உயிரெனும் - என்
போனது போகட்டும், புவிவசை பேசட்டும் பொல்லான் அம்புக ளெய்திடட்டும்
ஆனது ஆகட்டும், அருள் மழை பெய்திடும் அன்புமிகும் பேரின்ப மெனக்கருள் - என்