கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டர்
இரத்தமெல்லாம் உனக்காக
பாவங்களை அறிக்கையிடு
பரிசுத்தமாகிவிடு - நீ
காயப்பட்ட இயேசுவைப் பார்
கரம் விரித்து அழைக்கின்றார்
கண்ணீரோடு ஓடி வா - நீ
கரம்பிடித்து நடத்திச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்மணிபோல் காத்திடுவார் - உன்னை
எழுந்து ஒளி வீசு
மலைமேல் உள்ள பட்டணம் - தம்பி (நீ)
மறைவாக இருக்காதே
உற்றார் உன்னைத் துரத்திடலாம்
உன்னை அழைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்திடுவார்
உன் பிணிகள் ஏற்றுக் கொண்டார்
நீ சுமக்கத் தேவையில்லை
விசுவாசி அது போதும்