கண்ணீருடன் அலைந்தார்
அன்போடு உன்னை அழைக்கின்றாரே
இன்றே திரும்பி நீ வா
உள்ளம் உடைந்தேசு தேடுகின்றார்
சிற்றின்ப சேற்றில் சிக்கினதால்
சாத்தான் வலையில் நீ சிறையாகினாய் - காணாத
கர்த்தரின் அன்பை நீ சந்தேகித்தாய்
இயேசுபரன் வாக்கு வெறுத்தாயல்லோ - காணாத
இயேசுவின் பாதை நீ விட்டோடாதே
நீதி நிறைந்த தம் கரங்களை
நீட்டி உனை தாங்கி பயம் நீக்குவார் - காணாத
தேவ கோபாக்கினையால் மாள்வாரே
கர்த்தரின் பந்தியில் பங்கடைய
கண்ணீருடன் நீயோ அருள் வேண்டுவாய் - காணாத
இத்தனை காலம் நீ தள்ளலாமோ
கர்த்தரின் சித்தம் உன் வேளையிதே
கண்டு உணர்ந்து விரைந்தே நீ வா - காணாத