இந்நாள் வரையும் காத்தது
என் கிருபையே - கிருபையே
பங்கம் வரா நான் உன்னைத் தாங்கினேன்
எந்தன் அன்பினால் உன்னை நிறுத்த - கிருபையே
சொந்தமென நான் உன்னைச் சந்தித்தேன்
ஜெயகீதங்கள் பாட வைத்திட்டேன் - கிருபையே
ஏங்கும் போது உன்னண்டை வந்திட்டேன்
ஏற்ற நல் துணையை ஈந்திட்டேன் அல்லோ நான்
என்றும் உன்னை நான் சொந்தமாக்கினேன் - கிருபையே
செப்பமாக உன் கரம் பிடித்தேன்
ஜெய ஜெய கீதங்கள் தொனித்திடச் செய்தேனே
சேவை செய்யவும் கிருபை தந்தேனே - கிருபையே
கொண்டேன் உன்னை இம்மண்ணில் பிரித்து
உன் தந்தை நான் உன்னை விடேனே - கிருபையே