கொடூரப் பாவி எந்தனுக்காய்
குற்றமில்லாத தேவக்குமாரன்
குருதி வடிந்தே தொங்கினார் - கொல்கதா
பாவியை மீட்கப் பாடுபட்டார்
பாவமில்லாத தேவகுமாரன்
பாதகன் எனக்காய் தொங்கினார் - கொல்கதா
மகிமை யாவும் இழந்தோராய்
மாசில்லாத தேவகுமாரன்
மூன்றாணி மீதினில் தொங்கினார் - கொல்கதா
இரட்சிப்பின் நதி என்னில் பாய
ஆதரவில்லா தேவகுமாரன்
அகோரக் காட்சியாய் தொங்கினார் - கொல்கதா
கண்டிடுவாயே கண் கலங்க
கடின மனமும் உருகிடுமே
கர்த்தரின் மாறாத அன்பினிலே - கொல்கதா
உருகும் சத்தம் நீ கேளாயோ
உன் கரம் பற்றி உன்னை நடத்த
உன் நெஞ்சை ஆவலாய் தட்டுகிறார் - கொல்கதா