இராஜாதி இராஜன் தேவாதி தேவன்
இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை
தரிசிக்கும் தேவ சமுகத்திலே
அல்லேலூயா அல்லேலூயா
ஆவியில் பாடி மகிழுவோம்
ஆண்டவர் இயேசுவைக் கொண்டாடுவோம் - கோடா
திருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம்
அல்லேலூயா அல்லேலூயா
ஆவியில் பாடி மகிழுவோம்
ஆண்டவர் இயேசுவைக் கொண்டாடுவோம் - கோடா
கவலையின்றி பறந்து பாடுதே
அல்லேலூயா அல்லேலூயா
அற்புதமான சிருஷ்டிகரே
அந்த விசுவாசம் கற்றறிந்தோம் - கோடா
காட்டு புஷ்பத்தை உடுத்து வித்தீர்
அல்லேலூயா அல்லேலூயா
ஆடை ஆகாரம் தேவை எல்லாம்
அன்றன்று தந்தெம்மை ஆதரித்தீர் - கோடா
கருத்துடன் பாடி நன்றி கூறுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
தேவகுமாரன் வந்திடும் நாள்
தூய முகம் கண்டு கெம்பீரிப்போம் - கோடா