நான் என்றும் நம்பும் கன்மலை
கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே
இயேசுவில் மாத்திரமே - சீயோனிலே
எவர் எனக்கெதிராய் எழும்பினாலும்
எனக்கு எட்டாத உயரத்திலே
எடுத்தவர் நிறுத்திடுவார் - சீயோனிலே
மா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவே
திரை வழியாம் தம் சரீரத்தினால்
திறந்தாரே தூய வழி - சீயோனிலே
வாடியே மரண நிழல் சூழினும்
விசுவாசத்தின் கரத்தாலவர்
வாக்கை நான் பற்றிடுவேன் - சீயோனிலே
என்னையே படைத்திட்டேன் அவர் கரத்தில்
முடிவு வரை என்னை நடத்திடுவர்
முற்றுமாய் இரட்சிப்பாரே - சீயோனிலே