மகிழ்ந்து களிகூறு
சேனையின் கர்த்தர் உன் நடுவில்
பெரிய காரியம் செய்திடுவார்
பராக்கிரமும் அல்லவே
ஆவியினாலே ஆகும் என்று
ஆண்டவர் வாக்கு அருளினாரே - தேசமே
உள்ளங்கையில் வரைந்தாரே
வலக்கரத்தாலே தாங்கி உன்னை
சகாயம் செய்து உயர்த்திடுவார் - தேசமே
கொடிய யோர்தான் அகன்றிடும்
நித்தமும் உன்னை நல்வழி நடத்தி
ஆத்துமாவை நிதம் தேற்றிடுவார் - தேசமே
நிலைத்தே என்றும் ஜீவிப்பாய்
ஆவியின் பெலத்தால் அனுதினம் நிறைந்தே
உத்தம சாட்சியாய் விளங்கிடுவாய் - தேசமே
உன்னத ஆவியை பொழியுவார்
ஆயிரமாயிரம் ஜனங்கள் தருவார்
எழும்பி சேவையும் செய்திடுவாய் - தேசமே