பாதகனைப் போல் தொங்குகிறாரே
பார்! அவரின் திரு இரத்தம் உன்
பாவங்கள் போக்கிட பாய்ந்திடுதே
வருந்தியே அழைக்கிறாரே
வாஞ்சைகள் தீர்ப்பவரே - உன்
வாதைகள் நீக்குவாரே
இளைப்பாறுதலை அளித்திடுவாரே
இன்னுமென்ன தாமதமோ
இன்றே இரட்சிப்படைய வருவாய் - வந்திடுவாய்
சாப ரோகங்கள் தம் சரீரத்தில்
சர்வ வல்ல வாக்கை நம்பி
சார்ந்து சுகம் பெறவே வருவாய் - வந்திடுவாய்
நித்திய ஜீவ ஊற்றண்டை வாராய்
நீசனென்று தள்ளாதுன்னை
நீதியின் பாதையில் சேர்த்திடுவார் - வந்திடுவாய்
இன்பம் அவரின் அதரத்தின் மொழிகள்
இல்லையே இந்நேசரைப் போல்
இகமதில் வேறோர் அன்பருனக்கே - வந்திடுவாய்