உதித்து வரும் இவர் யாரோ?
முகம் சூரியன் போல் பிரகாசம்
சத்தம் பெருவெள்ள இரைச்சல் போலே
சாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமும் ஆ
பதினாயிரங்களில் சிறந்தோர்
எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
இன்பம் ரசத்திலும் அதிமதுரம் - இயேசுவே
வலக்கரத்தாலே தேற்றுகிறார்
அவர் நேசத்தால் சோகமானேன்
என்மேல் பறந்த கொடி நேசமே - இயேசுவே
என அழைத்திடும் இன்ப சத்தம்
கேட்டு அவர் பின்னே ஒடிடுவேன்
அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் - இயேசுவே
அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்
மணவாளியே! வா என்பாரே
நானும் செல்லுவேன் அந்நேரமே - இயேசுவே
ஆட்டுக்குட்டியின் மண நாளிலே
சுத்தப் பிரகாச ஆடையோடே
பறந்திடுவோம் நாம் மேகத்திலே - இயேசுவே