விளைவின் நற்பலன் வாடிடுதே
அறுவடை மிகுதி ஆளோ இல்லை
அந்தோ! மனிதர் அழிகின்றாரே.
அவர் போல் அலைந்திட கால்கள் இல்லை
எண்ணிலடங்கா மாந்தர் சத்தம்
உந்தன் செவியினில் தொனிக்கலையோ - விளைந்த
ஆயிரமாயிரம் அழிகின்றாரே
திறப்பின் வாசலில் நிற்பவர் யார்?
தினமும் அவர் குரல் கேட்கலையோ - விளைந்த
ஆண்டவர் வாக்கினை ஏற்றிடுவாய்
விரைந்து சென்று சேவை செய்வாய்
விளைவின் பலனை அறுத்திடுவாய் - விளைந்த
சபைதனில் விளங்கிட செயல்படுவாய்
நிமிர்ந்து நிற்கும் தூண்களைப் போல்
நிலைவரமாய் என்றும் தாங்கி நிற்பாய் - விளைந்த
ஆவலுடன் நீயும் பெற்றிடுவாய்
சபையின் நன்மைக்காய் உபயோகிப்பாய்
சந்ததம் சபையினில் நிலைத்திருப்பாய் - விளைந்த
உந்தனின் பங்கினை ஏற்றிடுவாய்
கர்த்தர் நாட்டின தோட்டத்திலே
கடைசிவரை நீயும் கனிக்கொடுப்பாய் - விளைந்த