உந்தன் சிலுவை என் மேன்மை
சுந்தரம் மிகும் இந்தப் பூவில்
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் - விந்தை
செல்வாக்குகள் மிக விருப்பினும்
குருசை நோக்கி பார்க்க எனக்கு
உரிய பெருமைகள் யாவும் அற்பமே - விந்தை
ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்
துங்க இரத்த ஊற்றில் மூழ்கி
தூய்மையடைந்து மேன்மையாகினேன் - விந்தை
சிந்துதோ தூயரோடன்பு
மன்னா இதைப் போன்ற சாட்சி
எந்நாளிலும் எங்கும் காணேன் - விந்தை
என்ன காணிக்கை ஈந்திடுவேன்
எந்த அரும் பொருள் ஈடாகும்
என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் - விந்தை