ஸ்தோத்திரம் இயேசு ராஜனுக்கே
ஆதியு மந்தமுமில்லோனே
அரூபனே உமக்கென்றும் ஸ்தோத்திரம்
பொற்கரனே ஒமேகாவே
புல்லணை மீதிலே ஸ்தோத்தரம்
பட்சமுற்று எந்தன் பாரம் தீர்த்த
பெத்தலை வாசனே ஸ்தோத்திரம் -அல்லே
மன்னவா உம்மன்பில் மகிழ்ந்திட
மயங்காமல் நீர் தாரணியில்
மனுவான அன்புக்காய் ஸ்தோத்திரம் - அல்லே
மாறாத பூரண சீராளா
மங்கிடா நித்திய வாசனே
மாசற்ற அன்புக்காய் ஸ்தோத்திரம் -அல்லே
அரூபியே சொருபியே ஸ்தோத்திரம்
அளியும் ஆதி அன்பையே
வழியில் விரைந்து செல்லவே - அல்லே