இன்றும் என்றும் துதித்திடுவேன்
வழுவாமல் என்னை உமக்காக
எடுத்தீர் எனையும் உமக்காக
கொடுத்தீர் உமையும் எனக்காக
துதியே துதியே துதித்திடுவேன்
எல்லாக் குறையும் தீர்த்தீரே
தொல்லைகள் யாவும் தொலைத்தீரே
அல்லல் யாவும் அறுத்தீரே
அலைந்த என்னையும் மீட்பரே
துதியே துதியே துதித்திடுவேன்
அம்புவியாவும் படைத்தீரே
அம்பரா உந்தன் வாக்காலே
எம்பரா எல்லாம் ஈந்தீரே
நம்பினோர்க்குந்தன் தயவாலே
துதியே துதியே துதித்திடுவேன்
அண்ணலே உந்தன் அருளாலே
அடியாரைக் கண் பார்த்தீரே
மன்னா எமக்கும் நீர்தானே
எந்நாளும் எங்கள் துணை நீரே
துதியே துதியே துதித்திடுவேன்
தேவே நீர் உந்தன் சிறகாலே
தினமும் மூடிக் காத்தீரே
தீதணுகாதும் மறைவினிலே
தேடியுமதடி தங்கிடுவேன்
துதியே துதியே துதித்திடுவேன்
அகில சிருஷ்டிகளும் துதிக்க
அடிமை துதியா திருப்பேனோ
அல்லும் பகலும் நித்தியமாய்
அன்பே உமையே துதித்திடுவேன்