நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன்
என் மேல கர்த்தர் கரம்
எஸ்தர் நான் தெபோராள் நான்
என் மேல கர்த்தர் கரம்
காக்கும் கரம் விலகாத கரம்
தொட்டு சுகம் தந்த கரம்
நிமிரக்கூடாத கூனியை அன்று
நிமிரச் செய்த நேசர் கரம்
பெருகச் செய்த அற்புத கரம்
வாலிபனே எழுந்திரு என்று
பாடையைத் தொட்டு எழுப்பின கரம்
மரித்தவளை தூக்கி நிறுத்தின கரம்
வெட்டப்பட்ட காதை அன்று
ஒட்ட வைத்த கர்த்தர் கரம்
இறைவாக்கு சொல்ல வைத்த கரம்
இரதத்திற்கு முன் எலியாவை
ஓட வைத்த தேவ கரம்