நம்பிக்கையே அதிசயமானவரே
எல்லாமே நீர்தானே
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் தினம் தேடுவேன்
எல்லாமே நீர்தானே
எனக்குள் வாழ்பவரே
இதயம் ஆள்பவரே – என் நேசர்
பலியானீர் சீலுவையிலே
பரிந்து பேசுபவரே
பிரதான ஆசாரியரே
வியத்தகு ஆலோசகரே
நித்திய பிதா நீரே
சமாதான பிரபு நீரே
பரிபூரண ஆனந்தம்
பேரின்பம் நீர்தானே
நிரந்தர பேரின்பமே
உடலும் இளைப்பாறுது
காக்கும் தகப்பன் நீரே
பரம்பரை சொத்து நீரே