எங்கள் இயேசு ராஜன் வானில் தோன்றும் நாள்
அல்லேலூயா (3)
சிந்தித்து மனந்திரும்பி அவரை அண்டிக்கொள்
விரைவினில் ஓடிவா விண்ணினில் சேரவே
வேகமாய் (3) - அந்த நாள்
பஞ்சம் பசி தாகமுமே மறைந்து போகுமே
வாதை நோய் துன்பங்கள் வருத்தங்கள் யாவுமே
நீங்குமே (3) - அந்த நாள்
இயேசுவோடு நின்று மிக யுத்தம் செய்குவார்
வேதாளம் பாதாளம் பூதங்கள் யாவுமே
அழிப்பார் (3) - அந்த நாள்
பரவசங்கள் சூழ்ந்து மிக மகிழ்ந்து பூரிப்பார்
ஆனந்தம் என்றுமே ஆர்ப்பரிப்போம் அவரையே
ஆனந்தம் (3) - அந்த நாள்