அடியார் மீதே இவ்வேளையிலே - இப்போ
பின்மாரி பெய்திடவே - அனுப்பும்
சுத்திகரிக்கும் எம்மை
குற்றங் குறைகள் கறைகளை
முற்றும் நீக்கிச் சுத்தம் செய்ய - அனுப்பும்
பலத்த காற்றாய் வந்தீர்
பலவீனர் எம் உள்ளத்திலும்
தேவ பெலனைப் பெற்றிடவே - அனுப்பும்
பெற்ற உம் ஆவிதனை
துக்கப்படுத்தா பாதுகாத்து
தூய வழியில் நடந்திட - அனுப்பும்
சத்தியம் சாற்றிடவே
புத்தியாய் நின்று யுத்தம் செய்ய
சக்தி ஈவீர் இந்நேரமே - அனுப்பும்
இடைவிடா சேவை செய்ய
இரட்சகர் இயேசுவின் சாட்சியாகப்
பாரில் எங்கும் ஜீவித்திட - அனுப்பும்