ஆனந்தமாய் உன்னில் வாழ்ந்திடுவேன்
தேவன் திருக்கை நிர்மாணித்ததாம்
சேருவேனே சொர்க்காலயமே -ஆ
விண்ணுலகின் நித்திய ஆலயத்தில்
சௌபாக்கிமே நான் வாழ்ந்திடுவேன் - ஆ
பேர் பெறும் சுந்தர வீடதையே - இதோ
தூரத்திலே அதை காண்கிறேன் நான் - ஆ
இராப்பகல் வேற்றுமை அங்கேயில்லை
தேவாட்டுக் குட்டி தீபமாகிடுவார் - ஆ
பிதாவின் முன்னில் சர்வ சித்தருமாய் - நம்
ஆத்ம நேசர் கண்ணீர் தான் துடைப்பார் -ஆ
தூதர் பொன் வீணைகள் தட்டிடுவார்
கீத நாதம் இதோ கேட்கிறதே - ஆ
இராஜனேசுவையே காண்பதற்காய் - நான்
போவதாலே என்ன ஆனந்தமே - ஆ