ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்
வறுமைக் கோலம் எடுத்தவதரித்தார்
முன்னுரைப் படியே முன்னனை மீதே
மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே - ஆனந்த
அடிமை ரூபம் தரித்திக லோகம்
தூதரும் பாட மேய்ப்பரும் போற்ற
துதிக்குப் பாத்திரன் பிறந்தாரே - ஆனந்த
மரண பயமும் புறம்பே தள்ளி
மா சமாதானம் மா தேவ அன்பும்
மாறா விஸ்வாசமும் அளித்தாரே - ஆனந்த
இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும்
கொடுமைப் பேயின் பெலன் ஒடுக்கும்
வலிமை வாய்ந்திடும் நாமமிதே - ஆனந்த
கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே
எண்ணியே பாடிக் கொண்டாடிடுவோம் - ஆனந்த