- Song Book:
Spiritual Songs of Joy
ஆவிக்குரிய சந்தோஷக் கீதங்கள்
ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் - எந்தன்
ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன்
அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தே - நல்
மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தே
மேலோக நாடெந்தன் சொந்தமதே - இந்தப்
பூலோக நாட்டமும் குறைகின்றதே
மாயையில் மனம் இனி வைத்திடாமல் - நேசர்
காய மதை எண்ணி வாழ்ந்திடுவேன்
- ஆனந்த
நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை - இயேசு
நாதன் என் பக்கமாய் வந்தனரே
பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தே - இந்தப்
பாரதில் எனை வெற்றி சிறக்கச் செய்தே
- ஆனந்த
அற்புதமாம் அவர் நேசமது - எந்தன்
பொற்பரன் சேவை என் சொந்தமது
பற்பல கிருபைகள் பகருகின்றார் - ஏழை
கற்புடன் அவர் பணி செய்திடவே
- ஆனந்த
கானானின் கரையிதோ காண்கிறதே - எந்தன்
காதலன் தொனி காதில் கேட்கின்றதே
காலம் இனி இல்லை உணர்ந்து கொண்டேன் - விரை
வாக என் ஒட்டத்தை தொடர்ந்திடுவேன்
- ஆனந்த
அழைத்தவரே அவர் உண்மையுள்ளோர் - தம்
அழைப்பதில் விழிப்புடன் நிறுத்த வல்லோர்
உழைத்திடுவேன் மிக ஊக்கமுடன் - அங்கு
பிழைத்திடவே அன்பர் சமூகமதில்
- ஆனந்த
ஜெபமதைக் கேட்டிடும் ஜீவனுள்ள தேவன்
என் பிதா ஆனதால் ஆனந்தமே
ஏறெடுப்பேன் என் இதயமதை - என்றும்
மாறாமல் பதில் தரும் மன்னனிடம்
- ஆனந்த