தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்.
நாதன் இயேசு என்னோடிருப்பார்
மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே
கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியை
கண்டு நன்றியுடன் பாடிடுவேன் - ஆனந்தமாய்
வாஞ்சையுடன் என்னைத் தேடி வந்தார்
இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன் - ஆனந்தமாய்
தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன்
என்றும் எனக்கவர் ஆதரவே - ஆனந்தமாய்
உம்பாதம் சேர்ந்திட வாஞ்சிக்கிறேன்
கண்பாரும் என்றும் நான் உம் அடிமை - ஆனந்தமாய்
ஆற்றிடுதே உந்தன் சமூகமே
பேரின்ப சீயோனில் வாழ்ந்திடவே - ஆனந்தமாய்