ஜீவ நதியே என்னில் பொங்கி பொங்கி வா
ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே - ஊற்று
ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர்
கர்த்தரின் கரத்தில் நித்தம் கனம் பெற்றிட - ஊற்று
எழும்பிட இந்த வேளை இரங்கிடுவீர்
ஆத்ம பாரமும் பரிசுத்தமும்
ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே - ஊற்று
இரட்சகரின் காயங்களில் வெளிப்படுதே
பாவக் கறைகள் முற்றும் நீங்கிட
பரிசுத்தர் சமூகத்தில் ஜெயம் பெற்றிட - ஊற்று
புது பெலனடைந்து நான் மகிழ்ந்திடவே
பரிசுத்தத்தை பயத்துடனே
பூரணமாக்கிட தேவ பெலன் தாருமே - ஊற்று