எம் இயேசு மா இராஜனே வந்திடுவார்
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
தேவ எக்காளம் வானில் முழங்க
தேவாதி தேவனை சந்திப்போமே - எக்காள
வல்லவர் வாக்குதாம் மாறிடாதே
தேவதூதர் பாடல் தொனிக்க
தேவன் அவரையே தரிசிப்போமே - எக்காள
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்
கர்த்தர் தாமே வெளிச்சமாவார் - எக்காள
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்
பரமனோ டென்றும் வாழ்ந்திடுவோம் - எக்காள
கர்த்தரின் வார்த்தையை உரைக்கின்றனர்
கர்த்தரே வாரும் வாஞ்சையை தீரும்
காத்திருக்கும் எம்மை சேர்த்திடுமே - எக்காள