உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்
உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன்
உயிர் தந்த தெய்வமே நீர்.
அல்லும், பகலிலும் பாடிடுவேன்
இயேசுவே ! எந்தன் ஆரூயிரே
மற்றும் எல்லாம் எனக்கு நீரே
வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோ
வாக்கு மாறாதவரே - ஆ
உந்தன் நாமத்தை நம்பிடுவேன்
உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்
உயிருள்ள தெய்வமே நீர் - ஆ
தந்த வாலிப நாட்களிலே
இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே
பரிசுத்த ஜீவியமே - ஆ
பண ஆஸ்தியும் வீண் அல்லவோ
பரலோகத்தின் செல்வமே என் அரும் இயேசுவே
போதும் எனக்கு நீரே - ஆ