உந்தன் கிருபை கிறிஸ்தேசுவே
அந்தமே இல்லா அன்பின் ஆழமதை
எண்ணி நான் துதித்திடுவேனே
சந்ததம் நல்கிடும் நன்மைகட்காய்
நாட்களும் போதுமோ நானிலத்தில் - எந்தன்
அகமதில் உம் பெலன் பெருகுவதால்
கிருபையால் அனுதினம் வளர்ந்திடுமே - எந்தன்
சேவையில் ஜீவனை ஊற்றிடினும்
தேவா நின் கிருபையின் ஊற்றென்னில் பாய்வதால்
சோராது நிறைபலன் ஈந்திடுவேன் - எந்தன்
அற்பமான எந்தன் சரீரத்தினை
தற்பரனே உந்தன் சாயலாய் மாற்றிடும்
ஒப்பற்ற சுவிசேஷம் ஈந்திட்டீரே - எந்தன்
மகிமையாய் நெருங்கியே வந்திடுதே
சேர்ந்தொன்றாய் வாழுவோம் நித்தியமாய் - எந்தன்