தேவா பதில் தாருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன்
தடையாவும் அகற்றிடுமே
தயை கேட்டு உம்பாதம் வந்தேன் – எந்தன்
கர்த்தாவே உம் வார்த்தையை
கேட்டிட காத்திருப்பேனே – எந்தன்
மீட்டிடும் என் இயேசுவே
போராடி ஜெபிக்கின்றேன் நாதா – எந்தன்
கண்ணீரின் ஜெபம் கேளுமே
கருணையின் பிரவாகம் நீரே – எந்தன்