இயேசுவின் கைபிடித்தேன் நான் அஞ்சிடேன்
வலங்கரம் பிடித்தார் இயேசுவோடு நடப்பேன்
அலை மோதும் மனித இதயத்தில்
கேள்விகள் எழும்பிடும் வீசும் புயலில்
கர்த்தர் கரம் பிடித்தே நான் நடப்பேன் - எனக்கென்ன
கவலையின்றி கடந்து செல்லுவேன்
ஜீவகரம் பிடித்தே நான் நடப்பேன் - எனக்கென்ன
என்னையும் கொல்கொதா பாதை அழைத்தார்
நித்திய கன மகிமை நான் அடைவேன்
நேசர் கரம் பிடித்தே நான் நடப்பேன் - எனக்கென்ன
இயேசுவே என் துணையாய் வருகின்றார்
வல்லகரம் பிடித்தே நான் நடப்பேன் - எனக்கென்ன
என் பிதாவின் வீட்டிலே நான் சேரும் நாள்
அன்பர் கரம் பிடித்தே நான் நடப்பேன் - எனக்கென்ன