உன்னத தேவன் உன் அடைக்கலமே
வானமும் பூமியும் தானம் விட்டு
நிலை மாறினாலும் (2)
மிஞ்சும் வறுமையோ வந்திடினும்
கொஞ்சமும் அஞ்சாதே
தஞ்சம் தந்து உன்னைத் தாங்கிடுவார் - என்
குற்றமே கூறித் திரிந்திடினும்
கொற்றவன் இயேசுன்னை
பெற்ற பிதாவைப் போல் அரவணைப்பார் - என்
அஞ்சாதே என்றவர் வசனம் தேற்றும்
வஞ்சகன் எய்திடும்
நஞ்சாம் கணைகளைத் தகர்த்திடுவார் - என்
ஆழ்த்துகையில் உன் அருகில் நிற்பார்
சூழ்ந்திடும் புயலை நீக்கி
வாழ்ந்திடவே வலக்கரம் பிடிப்பார் - என்
சரணடைந்தால் தைரியம் தந்திடுவார்
அரணவர் ஆபத்தில்
திரணமாய் மதிப்பாய் உன் ஜீவனையே - என்
அன்பர் சென்ற பாதை அதுவேதான்
துன்பமே உன் பங்கு
துன்பம் மூலம் தேவ ராஜ்யம் சேர்வாய் - என்