அவர் காட்டும் மாதிரியில்
அவர் செய்யும் பிதாவின் சித்தம்
அல்லேலூயா நம்பி செல்லுவேன்
அல்லேலூயா நானும் செல்லுவேன்
எனக்காக யாவும் செய்யவே
முசுக்கட்டை செடியின் தொனி
ஜெயம் ஜெயம் என்று கூறுதே
சீறிவரும் பிசாசை காண்கிறேன்
முன்னே மோசே கோல் இருப்பதால்
நாசமாகும் பிசாசை வெல்லுவேன் - ஜெயகிறிஸ்து
காதலன் தொனி கேட்குதே
காலம் இனி இல்லை ஆதலால்
களிப்பாக ஓடி சேருவேன்
கர்த்தர் அன்பை எங்கும் கூறுவேன் - ஜெயகிறிஸ்து
அவரின் சத்தம் கேளாமல்
அவர் பாதை இருளாகையில்
அழைத்தவர் உண்மையுள்ளவர்
அவர் மடியில் அமர்ந்திருப்பேன் - ஜெயகிறிஸ்து