துன்ப வனாந்திரத்தில் நடந்திட
இன்ப நல் வாழ்வடைந்தேன்
பாலினும் வெண்மை தூயப்பிதா
பூரண ரூப சௌந்தர்யமே
பேர் சிறந்த இறைவா - என் நேசர்
கர்த்தரின் நாமம் பரிமளமே
இயேசுவின் பின்னே ஓடி வந்தோம்
என்னையும் இழுத்துக் கொண்டார் - என் நேசர்
நேசர் பிரசன்னம் வந்திறங்க
கிச்சிலி மரத்தின் கீழ் அடைந்தேன்
கர்த்தரின் ஆறுதலே - என் நேசர்
தூதாயீம் நற்கனி தூயருக்கே
வேலி அடைத்த தோட்டமிதே
வந்திங்குலாவுகின்றார் - என் நேசர்
காட்டுப் புறாவின் பாட்டொலிக்கும்
கன்மலைச் சிகரம் என் மறைவே
இன்னேரமே அழைத்தார் - என் நேசர்
நித்தம் என் ஆத்மா நல் விழிப்பே
என் கதவருகே நின்றழைத்த
இயேசுவை நேசிக்கிறேன் - என் நேசர்
நேசம் மரணம் போல் வலிதே
வெள்ளங்கள் திரண்ட தண்ணீர்களால்
உள்ளம் அணைந்திடாதே - என் நேசர்
தேவ குமாரன் வந்திடுவார்
அம்மினதாபின் இரதம் போல
அன்று பறந்து செல்வேன் - என் நேசர்