கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொலிகிறேன்
அப்பா உமக்கு நன்றி ராஜா உமக்கு நன்றி
அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா - அப்பா
எந்த நிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே
பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணை செய்தீரே
உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்
எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா
இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர்
பாசத்தோடு கண்களையே திறந்தீர் ஐயா