முடியாதது உமக்கு எதுவுமில்லை
முடியாதது எதுவுமில்லை
வானம் பூமி உண்டாக்கினீர்
நீட்டப்பட்ட உம் கரத்தாலே
அகிலத்தையே ஆட்சி செய்கின்றீர்
அதிசயங்கள் ஒன்றுமில்லை
ஆயிரமாயிரம் தலைமுறைக்கும்
அன்புகாட்டும் ஆல்மைட்டி காட்
உற்று நோக்கிப் பார்க்கின்றீர்
அவனவன் செயல்களுக்கேற்ப
தகுந்த பரிசு தருகின்றீர்
செயல்களிலே வல்லவர் நீர்
சேனைகளின் கர்த்தர் நீரே
எல்ஷடாய் உம் நாமமே
இன்றும் செய்ய வல்லவர் நீர்
அற்புத அடையாளங்களினால் உம்
ஜனங்கள் புறப்படச் செய்தீர்