உம்மில் அன்பு கூர்ந்திடுவேன்
துருகமும் நீர், கேடகம் நீர்!
இரட்சண்யக் கொம்பும் அடைக்கலம் நீர்!
துர்ச்சனப் பிரவாகம் புரண்ட போதும்
உருக்கமாய் வந்து உதவி செய்தார் - கர்த்தாவே
உத்தமனை நீர் உயர்த்திடுவீர்
புதிய கிருபையின் உறைவிடமே! - கர்த்தாவே
உம்மாலே மதிலைத் தாண்டுவேன்
சதா காலமும் ஜெயமும் எடுப்பேன் - கர்த்தாவே
உமது கரம் என்னை உயர்த்தும்
அவரே எந்தன் கன்மலையாவார் - கர்த்தாவே
மான்களின் கால்களைப் போலாக்கி
உயர் ஸ்தலத்தில் என்னை நிறுத்துகின்றார் - கர்த்தாவே