தங்கி வாழ்பவன் யார்
குடியிருப்பவன் யார் (2)
நீதியிலே நிலைநிற்பவன்
மனதார சத்தியத்தையே
தினந்தோறும் பேசுபவனே
தோழனுக்குத் தீங்கு செய்யாமல்
நிந்தையான பேச்சுக்களை
பேசாமல் இருப்பவனே
காலமெல்லாம் கனம் செய்பவன்
ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும்
தவறாமல் இருப்பவனே
இதய நேர்மை உள்ளவன்
இரட்சிப்பின் தேவனையே
எந்நாளும் தேடுபவனே